கடித ஊழியம்

கடித ஊழியம் பிரார்த்தனைப் படிவம் பெண்களுக்கான ஊழியம்
நிறுவனர் அற்புதங்கள்

foj Cêa«

"வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" (மத்தேயு 11:28).

துயரப்படுகிறீர்களா?

தயங்காமல் எங்களுக்கு எழுதுங்கள்! உங்களுக்காகப் பிரார்த்தனை செய்ய நாங்கள் காத்திருக்கிறோம். உலகமெங்கிலும் நம் அன்பிற்குரிய சகோதரர் தினகரன் குடும்பத்தினர் துயருற்றோருக்காக ஏறெடுக்கும் பிரார்த்தனைகளுக்கும், ஜெபகோபுரத்தில் ஜெபவீரர்கள் ஏறெடுக்கும் பிரார்த்தனைகளுக்கும் ஆண்டவர் செவிகொடுத்து, அற்புதங்களைச் செய்தருளுகிறார். இதன் வழியாக, பல்லாயிரக்கணக்கானோர் ஆண்டவருடைய அன்பின் உண்மையை உணர்ந்து நன்றி செலுத்துகிறார்கள்.

சமீபத்தில் ஆந்திரப் பிரதேசம், விஜயவாடாவில் வசித்துவரும் சகோதரி. கே. ஷ்ராவணி அவர்களுடைய வாழ்க்கையில் நடந்த அற்புதத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ளுவதில் மகிழ்ச்சியடைகிறோம். அவர்கள் எங்களுக்கு எழுதியனுப்பிய சாட்சியின் விவரம் பின்வருமாறு :

“முடக்குவாதத்தினால் பாதிக்கப்பட்டிருந்த என்னுடைய உறவினருக்காக ஜெபிக்கும்படி சகோதரர். டி.ஜி.எஸ். தினகரன் அவர்களுக்கு எழுதியிருந்தேன். சகோதரரும் உருக்கமாக ஜெபித்து, “நான் உங்களுடைய உறவினருக்காக மிகுந்த உருக்கத்துடன் ஜெபித்துக்கொண்டிருக்கிறேன். நிச்சயமாக அவர்கள் தெய்வீக சுகத்தைப் பெற்றுக்கொள்ளுவார்கள்!” என்று பதில் அனுப்பியிருந்தார். அந்தக் கடிதத்தை நாங்கள் பெற்றுக்கொண்ட சில நாட்களிலேயே அவர்கள் பூரண சுகமடைந்தார்கள். சகோதரருடைய ஊக்கமான வேண்டுதலைக்கேட்டு தேவன் என்னுடைய உறவினருக்கு சுகத்தைக் கட்டளையிட்டார். கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக!”

இப்படிப்பட்ட அற்புதம் உங்களுக்கும் நிச்சயமாக நடக்கும். நீங்களும் துயரத்தினின்று விடுபடுவீர்கள். ஆங்கிலம், ஹிந்தி, மற்றும் தென்னிந்திய மொழிகளில் எங்களுக்கு எழுதுங்கள். தினகரன் குடும்பத்தினர் இந்தியா, மற்றும் வெளிநாடுகளில் நற்செய்தி அளிப்பதற்காக பயணம் சென்றாலும்கூட, நீங்கள் அனுப்பும் கடிதம் அவர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் தொலைநகல் வழியாக அனுப்பி வைக்கப்படும். ஆகவே, அவர்கள் எங்கிருந்தாலும் உங்களது பிரார்த்தனை விண்ணப்பங்களைப் பெற்று ஊக்கத்துடன் மன்றாடுவார்கள்.

இன்றே எங்களுக்கு எழுதுங்கள்! உங்களுடைய கடிதங்கள் நம்பகரமான முறையில் கையாளப்படும் என்பது உறுதி!!

இயேசு அழைக்கிறார்
சென்னை - 600 600, இந்தியா.
தொலைபேசி : (044) 23456677
தொலைநகல் : (044) 2493 6988
மின்னஞ்சல்: paul@jesuscalls.org

Set As Default Homepage           ||            Share With A Friend           ||           Your Comments 

Copyright 2018 Jesus Calls. All rights reserved.