சகோதரர். டி.ஜி.எஸ். தினகரன்

திருப்பம் உன்னத அழைப்பு ஊழியத் தோற்றம்
அபிஷேக வல்லமை பெருந்திரள் சென்றடைவு அழுகையின் பள்ளத்தாக்கு

திரள்கூட்டம்

சகோதரர். டி.ஜி.எஸ். தினகரன் 1972 ம் வருடம், மார்ச் மாதம், 2 ம் தேதியன்று முதன் முதலாக ஈகடிவே கயஉந="யசயைட" ளணைந="2"ழூகுநுக்ஷஹஈ/கடிவேழூ வானொலியில் தேவசெய்தியளித்தார். உலகம் முழுவதிலும் சென்று பிரசங்கிக்கும் நோக்கத்தினை நிறைவேற்றும்படியாக 1973 ம் ஆண்டில், இலங்கையை நோக்கிப் பயணமானார். சகோதரருடைய அன்பும், மனதுருக்கமும் நிறைந்த தேவவார்த்தைகளைக் கேட்பதற்காக கூட்டங்கள் நடைபெறும் இடங்களுக்கு மக்கள் பல்லாயிரக்கணக்கில் குவிந்தார்கள் என்றே சொல்லலாம்.

1973 ம் ஆண்டில் முதன்முதலாக தன்னுடைய எழுத்து ஊழியத்தினைத் துவங்கினார். 1973 ம் ஆண்டு, மே மாதம் “இயேசு அழைக்கிறார்” பத்திரிகை வெளியிடப்பட்டது. இதன் மூலமாக எண்ணிலடங்காதோர் தங்களுடைய வாழ்க்கையிலே அற்புத அடையாளங்களைப் பெற்றுக்கொண்டார்கள்.

பத்திரிகைகள் மட்டுமல்லாது, இவரால் வெளியிடப்பட்டுள்ள பற்பல புத்தகங்களும் இறைவல்லமையை இவ்வுலகிற்கு எடுத்துச் செல்லுகின்றன. சமீபத்தில், ‘பரிசுத்த ஆவியின் வரங்கள்’ என்னும் பெயரில் இவர் வெளியிட்ட புத்தகம், பல்லாயிரக்கணக்கானோருடைய வாழ்வில் எழுப்புதல் அக்கினியை அனல்மூட்டி எழுப்பியுள்ளது.

1977 ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 26 ம் தேதியன்று ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து இவர்முன் தோன்றி தம்மைப்போன்று சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும் பெருந்திரளை உருவாக்கும்படிக்குக் கட்டளையிட்டார். தேவ சத்தத்திற்கு கீழ்ப்படியும் வண்ணம், 1980 ம் ஆண்டு, ஜுலை மாதம் சென்னையில் ‘வல்லமை ஊழியப் பயிற்சி முகாம்’ ஆரம்பிக்கப்பட்டது. இந்நடைமுறை சுவிசேஷப் பயிற்சிதனை இந்தியாவிலும், உலகெங்கிலுமுள்ள பல்வேறு பிரிவினரும் ஊக்கத்துடன் பயின்று ஊழியத்தில் எழும்பிப் பிரகாசிக்கின்றனர். இப்பயிற்சி முகாமில் கலந்துகொள்ளும் அனைவரும் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தையும், வல்லமை வரங்களையும், தேவகிருபையையும் பெற்றுக்கொள்ளுகிறார்கள். ஆகவே இவ்வுலகின் எல்லைவரை, அன்பும், மனதுருக்கமும் கொண்ட நற்சுவிசேஷத்தைச் சுமந்துச் செல்லும் மனப்பக்குவம் அடைகிறார்கள். உண்மையாகவே, இங்குப் பயிற்சிப் பெற்ற நற்செய்தியாளர்கள் தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும், திருச்சபையிலும் மின்னொளிச் சுடர்களாகத் திகழ்ந்துவருகிறார்கள்.

1980 ம் ஆண்டில் சகோதரர். டி.ஜி.எஸ். தினகரன் முதன் முதலாகத் தன்னுடைய தொலைக்காட்சி ஊழியத்தை மலேசியாவில் துவங்கினார். இன்று வல்லமையுள்ள அவருடைய நற்செய்திகள் அனைத்தும் ஆயிரக்கணக்கான ஒலி ஒளி நாடாக்கள் மற்றும் சி.டி.களில் பதிவு செய்யப்படுகின்றன. ஆறுதல், சுகம் மற்றும் விடுதலையளிக்கும் இந்நற்செய்திகளைப் புறக்கணிப்போர் எவருமிலர்.

1983 ம் ஆண்டு, ஆகஸ்டு மாதம், 12 ம் தேதியன்று எந்நேரத்திலும் தேவையில் இருக்கும் ஜனங்களுக்கென்று உருக்கமாகப் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்ற தேவவழிநடத்துதலைப் பெற்றுக்கொண்டார். இதன் விளைவாகவே, 24 மணிநேர ஜெபகோபுரத்தை உருவாக்கினார். இன்று இந்த ஜெபகோபுரமானது அனைத்து நவீன வசதிகளுடனும் அமைக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் தொலைபேசியின் மூலம் தொடர்புகொள்ளும் ஜனங்களுக்காகப் பிரார்த்தனைச் செய்ய, சிறப்பான முறையில் பயிற்றுவிக்கப்பட்ட மனதுருக்கமுள்ள ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். உலகின் பற்பல பகுதிகளிலும் இயேசு அழைக்கிறார் ஜெபகோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மறுபடியும், 1985 ம் ஆண்டு, ஜுலை மாதம், 25 ம் தேதியன்று, அருள்நாதர் இயேசுகிறிஸ்து இவருக்குத் தரிசனமானார். இயேசு அழைக்கிறார் ஊழியத்தைத் தாங்க விரும்பும் இளைஞர்களுக்காக விசேஷித்ததொரு திட்டத்தை ஏற்படுத்தும்படி சொன்னார். அதன் விளைவாகவே, இளம் பங்காளர் திட்டம் ஏற்படுத்தப்பட்டது.

1993 ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 10 ம் தேதியன்று இவரால் ஏற்படுத்தப்பட்ட பெதஸ்தா பிரார்த்தனை மையம், சிலுவைப் பாடுகளின் ஏழு நிலைகளைச் சித்தரித்துக் காட்டுவதால், காண்போரின் மனங்களுக்கு இஃது ஒரு நம்பிக்கையின் ஒளி வீசும் மையமாகவே அமைந்திருக்கிறது. இக்காட்சிகளைக் காண்போர் அனைவரும் பாடுகளின் வழிச்சென்ற கிறிஸ்து வாழ்ந்த நிஜமான காலக்கட்டத்திற்கே அழைத்துச் செல்லப்படுகிறார்கள். ஆகவே கிறிஸ்துவின் தியாகத்தை உணர்ந்து, மனந்திரும்புதலுக்கேற்ற துக்கத்தினால் நிறைந்து கண்ணீர் வடிக்கிறார்கள்.

சகோதரர். டி.ஜி.எஸ். தினகரன் தொலைக்காட்சி ஊழியங்களில் ஈகடிவே கயஉந="ஏயயேஎடை-க்ஷயசயni"ழூ&டவ;டுபட்டபோதுஈ/கடிவேழூ, ஊழியத்தில் ஒரு மகாபெரிதான திருப்புமுனை உண்டாக்கப்பட்டது. இயேசு அழைக்கிறார் ஊழியங்களின் வழியாக வெளியிடப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் சொந்தமான திரைப்பட அரங்கில் தயாரிக்கப்பட்டு பல்வேறு சேனல்களின் வழியாக ஒளிபரப்பப்பட்டதே இதன் முக்கிய காரணமாகும்.

1986 ம் ஆண்டு, நவம்பர் மாதம், 4 ம் தேதியன்று 2,800 மாணவர்கள் தங்கிப் படிக்கக்கூடிய காருண்யா பொறியியல் கல்லூரியை (தற்போது காருண்யா பல்கலைக் கழகம்) நிறுவினார்.

nk‰gFÂ


அழுகையின் பள்ளத்தாக்கு

1986 ம் ஆண்டு, மே மாதம், 21 ம் தேதியன்று இம்மாபெரும் தீர்க்கதரிசியின் வாழ்க்கையில் பேரலை என்னும் போராட்டத்தின் இரைச்சல் உண்டாகியது. அதுதான் அசைக்கமுடியாத அவருடைய விசுவாசத்தின் பரீட்சையாக அமைந்தது. கோயம்புத்தூரில் அமைந்துள்ள காருண்யா பொறியியல் கல்லூரிக்கு (தற்போது காருண்யா பல்கலைக் கழகம்) காரில் பயணம் சென்றபோது, தன்னுடைய ஒரே மகள் ஏஞ்சல் தினகரனை கொடிய விபத்தில் இழக்க நேரிட்டார்.

இந்நிலை அவரை மிகவும் மனம்நோகச் செய்தது மட்டுமல்லாமல் ‘கைவிடப்பட்டோமோ!’ என்ற ஐயத்தினையும் எழுப்பியது. இன்றும்கூட அவர் தன்னுடைய மகளை நினைவுகூரும்போது, அவருடைய கண்கள் குளமாகும். ஆனாலும், தளர்ந்திடாத நிலைவரம்கொண்ட இருதயத்தோடு கண்ணீரில் வாழும் ஜனங்களுக்கு கிறிஸ்துவின் அன்பையும், மனதுருக்கத்தையும் எடுத்துரைக்கிறார்.

போதகர். பென்னி ஹின், டாக்டர். பேட் ராபர்ட்சன், டாக்டர். டேவ் ராபர்ட்சன், போதகர். ஜான் ஆஸ்ட்டீன் போன்ற தலைசிறந்த தேவ ஊழியர்கள் அனைவரும் சகோதரர். டி.ஜி.எஸ். தினகரன் அவர்களை இக்காலத்து இந்தியாவின் அப்போஸ்தலர் என்றே அழைக்கிறார்கள்.

பல்திட்ட ஊழியங்களின் வழியாக இவ்வூழியத்தை ஸ்தாபித்த சகோதரர். டி.ஜி.எஸ். தினகரன் அவர்கள், இன்னும் அதிகமான ஊக்கத்துடன், கிறிஸ்துவின் அன்பையும், மனதுருக்கத்தையும் சுமந்துசெல்லும் புதுப்புது திட்டங்களை செயல்படுத்தும் ஆர்வம் கொண்டுள்ளார். ஆம்! எப்படியாவது இவ்வுலகமெங்கிலும் கிறிஸ்துவின் அன்பையும், மனதுருக்கத்தையும் கொண்டு செல்லுவதே இவ்வூழியத்தின் உன்னதமான இலக்காகும்.

பற்பல பிரார்த்தனைக் கூட்டங்களில் சகோதரர். டி.ஜி.எஸ். தினகரன் அவர்கள் தேவசெய்தி அளிக்கும்போது, கனமான மழைபெய்து கூட்டம் தடைபடும் வண்ணம் தோன்றும். ஆனால், அவருடைய உருக்கமான பிரார்த்தனைகளுக்கு செவிகொடுக்கும் தேவன், இயற்கைக்கும் அப்பாற்பட்ட விதத்தில் மழையை நிறுத்தி, அற்புதமாக கூட்டம் தொடர்ந்தேறும்படி செய்கிறார்.

கோடிக்கணக்கானோர் பெற்றுக்கொண்ட கடல் மணலத்தனையான அற்புத சாட்சிகள் அனைத்தும் இயேசு அழைக்கிறார் அலுவலகத்திலே தேவநாமத்தின் மகிமைக்கென்று பத்திரமாக வைக்கப்பட்டிருக்கின்றன. குருடர்கள் பார்வையடைவதும், முடவர்கள் நடப்பதும், கேன்சரும், கட்டிகளும் மறைந்துபோவதும் எத்தனை வியப்பானது!

மேற்பகுதி


முதல்பகுதி|| முற்பகுதி

Set As Default Homepage           ||            Share With A Friend           ||           Your Comments 

Copyright 2017 Jesus Calls. All rights reserved.