சகோதரி. இவாஞ்சலின் பால் தினகரன்

1968 ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 24 ம் தேதியன்று பிறந்த இவர், 1989 ம் ஆண்டு, ஜுன் மாதம், 2 ம் தேதியன்று டாக்டர். பால் தினகரன் அவர்களோடு திருமணத்தில் இணைந்தார். இந்நன்னாளிலே அன்பிற்குரிய தினகரன் குடும்பத்தினருடன் உன்னதரின் ஊழியத்திலும் இணைக்கப்பட்டார். டாக்டர். பால் தினகரன் அவர்களைத் தாங்கும் ஓர் தூணாக இருப்பதோடல்லாமல், இவர் பிரார்த்தனைத் திருவிழாக்களிலும் தேவசெய்தியளித்து, உருக்கமாக ஜெபிப்பதின் மூலம் ஜனங்களுக்கு ஆண்டவரிடத்திலிருந்து அற்புதங்களைப் பெற்றுத் தருகிறார்.

1990 ம் ஆண்டு ‘நல்ல நண்பன்’ பத்திரிகையின் ஆசிரியராக, பத்திரிகை ஊழியத்தில் இணைந்தார். டாக்டர். பால் தினகரன் அவர்களோடு இணைந்து செயல்படும் பத்திரிகை ஊழியத்தின் மூலம் அநேக வாலிபர்கள் ஊக்குவிக்கப்பட்டு, தங்களுடைய வாலிபப் பருவத்திலேயே கர்த்தருக்கென்று எழும்பி பிரகாசிக்கிறார்கள். இவரிடத்தில் ஆலோசனைகளையும், வழிநடத்துதலையும் கேட்டு எழுதும் அனைவருக்கும் ஜெபத்துடனும் மிகுந்த கருத்துடனும் தேவவழிநடத்துதலுடனும் பதில் எழுதுகிறார்.

குழந்தைகளுக்காகவும், வாலிபர்களுக்காகவும் விசேஷித்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் வழங்குகிறார். ஆயிரக்கணக்கான வாலிபர்களுக்கும், பெண்களுக்கும், மனம் உடைந்தோருக்கும், ஆசீர்வாதமான பாத்திரமாக தேவன் இவரை வல்லமையுடன் எடுத்துப் பயன்படுத்துகிறார்.

சாம் (பிறந்த தேதி :1990, ஜுலை 15), ஷேரன் (பிறந்த தேதி : 1992, ஜனவரி 12), ஸ்வீட்டி (பிறந்த தேதி : 1998, பிப்ரவரி 5) என்னும் அருமையான மூன்று குழந்தைகளுக்கும் இனிமையான தாயாராக திகழ்ந்து வருகிறார். இச்சின்னஞ்சிறு மணிகளைப் பிரார்த்தனைத் திருவிழாக்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் உற்சாகத்துடன் &டவ;டுபடுத்துகிறார். சாம் மற்றும் ஷேரன் இணைந்து பாடிய ‘உம்மைக் காணவேண்டும், அன்பு மலர்கள், சின்னஞ்சிறு தீபம், சிட்டுக் குருவி, சின்னச் சின்ன மலர்களே’ என்னும் பாரம்பரிய, மற்றும் புதுப் பாடல்களைக் கொண்ட இசைத் தொகுப்புகள் மெய்யாகவே கேட்போரின் செவிகளையும், கருத்துக்களையும் கவர்ந்திழுக்கிறது. சமீபத்தில் வெளிவந்த ஸ்வீட்டியின் 'ஜீசஸ் லவ்ஸ் மீ’ விசிடி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

Set As Default Homepage           ||            Share With A Friend           ||           Your Comments 

Copyright 2018 Jesus Calls. All rights reserved.