டாக்டர். பால் தினகரன்

உன்னத அழைப்பு தலைமைத்துவப் பயிற்சி இருமடங்கு அபிஷேகம்
திரள்கூட்டம் வாலிபருக்கான கரிசனை பிரார்த்தனைப் படிவம்

இவர் 1962 ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 4 ம் தேதியன்று பிறந்தார். ஆண்டவரால் தெரிந்தெடுக்கப்பட்டு தன்னுடைய தந்தை சகோதரர். டி.ஜி.எஸ். தினகரன் அவர்களைப்போலவே, கோடிக்கணக்கானோரின் கண்ணீரைத் துடைக்கும் அன்பும், மனதுருக்கமும் கொண்ட சுகமளிக்கும் ஊழியங்களைச் செய்துவருகிறார்.


c‹dj miH¥ò

உலகத் தோற்றத்திற்கு முன்னமே தேவாதி தேவன் தாம் முன்குறித்திருந்தபடி, சகோதரர். பால் தினகரன் அவர்களுடன் தனிப்பட்ட சந்திப்பை ஏற்படுத்தினார். 1980 ம் ஆண்டு, ஜுலை மாதம், 21 ம் தேதியன்று தன்னை முற்றிலுமாக ஆண்டவரின் அன்புக் கரங்களில் ஒப்புக்கொடுத்தார். அன்றுமுதல் இன்றுவரை உலகம் முழுவதிலும், மனமுடைந்தோருக்கு ஆண்டவருடைய அன்பையும், மனதுருக்கத்தையும் சுமந்துசெல்லும் கனத்திற்குரிய பாத்திரமாக விளங்கிவருகிறார்.

ஆண்டவரிடத்தில் தன்னை முற்றிலுமாக அர்ப்பணித்த ஒரு மாதத்திற்குள்ளாகவே, 1980 ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 14 ம் தேதியன்று, தூத்துக்குடியில் நடைபெற்ற பிரார்த்தனைத் திருவிழாவில் முதன் முதலாக தேவசெய்தியைப் பகிர்ந்தளித்தார். பரிசுத்த ஆவியானவரால் அனல் மூட்டி எழுப்பப்பட்டார். தேவ தீர்மானத்தின்படியே, 1980 ம் ஆண்டு, நவம்பர் மாதம், 20 ம் தேதியன்று பரிசுத்த ஆவியானவரின் அளவில்லாத அபிஷேகத்தைப் பெற்றுக்கொண்டார்.

மேற்பகுதி


தலைமைத்துவப் பயிற்சி

சகோதரர். பால் தினகரன் தன்னால் இயன்றவரை இயேசு அழைக்கிறார் ஊழியங்களில் தன்னை <டுபடுத்திக்கொண்டு செயல் திட்டங்கள் அனைத்தையும் மேம்படுத்தினார்.

துரித வளர்ச்சியில் இயங்கிவரும் இயேசு அழைக்கிறார் ஊழிய நிர்வாகப் பணிகளைச் சீரமைப்பதற்கென்றே இவர் உரிய பயிற்சிகளில் தன்னை &டவ;டுபடுத்திக்கொண்டார். நிர்வாக மேலாண்மையில் முதுகலைப் பட்டம் (எம்.பி.ஏ) பெற்ற இவர், தன்னுடைய 26 ம் வயதில், சென்னைப் பல்கலைக் கழகத்திலேயே மேலாண்மையில் பி.எச்.டி. பட்டம் பெற்ற முதல் மாணவராகத் திகழ்ந்தார். தன்னுடைய மேலாண்மைத் திறன்கள், மற்றும் மிகப்புதிதான கருத்துக்கள் அனைத்தையும் இயேசு அழைக்கிறார் ஊழியத்திற்கென்று அர்ப்பணம் செய்துள்ளார். இன்று இவருடைய திறம்வாய்ந்த தலைமைத்துவத்தினால், முறையோடு இயங்கி வரும் ஊழியங்களின் மூலம் கோடிக்கணக்கானோர் மிக விரைவில் சந்திக்கப்படுகிறார்கள். இதன் மூலம் அநேகர் கண்ணீரினின்று விடுபட்டு, ஆறுதல் நிறைந்த உள்ளத்தைப் பெற்றுக்கொள்ளுகிறார்கள்.

இவர் காருண்யா பல்கலைக் கழகத்தின் வேந்தராக பணியாற்றி வருகிறார். மட்டுமல்லாது, இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையைச் சார்ந்த தேசிய சிறுபான்மையினர் கல்வி கண்காணிப்பு குழுவின் உறுப்பினராகவும், அனைவருக்கும் கல்வி (சர்வசிக்ஷ அபியான்) இயக்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் உள்ளார்.

மேலும், 1991 ம் ஆண்டு இவாஞ்சலின் மெட்ரிகுலேஷன் உயர்நிலைப் பள்ளியையும், 1997 ம் ஆண்டு காருண்யா இன்டர்நேஷனல் மெட்ரிகுலேஷன் உயர்நிலைப் பள்ளியையும் நிறுவியதின் மூலம், டாக்டர். பால் தினகரன் கல்வி ஊழியங்களை விரிவுபடுத்தினார்.

மேற்பகுதி


பிற்பகுதி|| நிறைவு

Set As Default Homepage           ||            Share With A Friend           ||           Your Comments 

Copyright 2018 Jesus Calls. All rights reserved.