டாக்டர். பால் தினகரன்

உன்னத அழைப்பு தலைமைத்துவப் பயிற்சி இருமடங்கு அபிஷேகம்
திரள்கூட்டம் வாலிபருக்கான கரிசனை பிரார்த்தனைப் படிவம்

இருமடங்கு அபிஷேகம்

கோடிக்கணக்கானோர் குழுமியுள்ள கூட்டத்திலும் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் வெளிப்படுத்தல் மூலம் டாக்டர். பால் தினகரன் தீர்க்கதரிசனம் உரைத்து, அவர்களுடைய வாழ்க்கை நிலையை எடுத்துரைக்கிறார். பெயர் சொல்லி அழைக்கப்பட்டோர், அற்புதங்களைப் பெற்றுக்கொண்டோர் அனைவரும் மேடைக்கு விரைந்துவந்து பரிசுத்த ஆவியானவர் செய்த கிரியைகளைக் குறித்து சாட்சியாக அறிவிக்கிறார்கள்.

ஜனங்கள் அனைவரும் நோயிலிருந்தும், கட்டுகளிலிருந்தும், பிசாசின் போராட்டங்களிலிருந்தும் விடுதலைப் பெற்றுக்கொள்ளுவதற்காக அவரால் ஏறெடுக்கப்படும் உள்ளம் உடைந்த உருக்கமான ஜெபம் பரலோகை அசைக்கிறது. ஆகவே, இயற்கைக்கும் அப்பாற்பட்ட அதிசயங்களைச் செய்வதில் கர்த்தர் மனமகிழ்கிறார். குருடர்கள் பார்வை பெறுவதும், செவிடர்கள் கேட்பதும், முடவர்கள் நடப்பதும், கேன்சர் கட்டிகள் மறைவதும், பிசாசுகள் விலகியோடுவதும் காண்போரின் கண்களை அதிசயத்தில் ஆழ்த்துகின்றன. அற்புதங்களைக் கேட்ட மகிழ்ச்சியினால் ஜனங்கள் கைதட்டி ஆர்ப்பரிக்கும் காட்சி சந்தோஷத்தையும், விடுதலையையும் உணர்த்துகின்றது.

மேற்பகுதி


பெருந்திரள் சென்றடைவு

அன்பும், மனதுருக்கமும் கொண்ட கிறிஸ்துவின் நற்செய்தியினை உலகமெங்கிலும் எடுத்துச் செல்லவேண்டுமென்று கருதி, டாக்டர். பால் தினகரன் அவர்கள் எழுத்துவழி ஊழியத்தில் &டவ;டுபடத் துவங்கினார். குழந்தைகளுக்கும், வாலிபர்களுக்கும் உரிய கரிசனை அவருடைய உள்ளத்தில் எப்பொழுதும் நிறைந்திருப்பதுண்டு. ‘பறக்கவே பிறந்தேன்’ என்ற தலைப்பில் அவர் வெளியிட்ட புத்தகம் அநேக வாலிபருக்கு விசுவாசத்தையும், திடமனதையும் பிறப்பிக்கிறது.

1989 ம் ஆண்டு, ஜுன் மாதம், 2 ம் தேதியன்று டாக்டர். பால் தினகரன் அவர்கள் சகோதரி. இவாஞ்சலின் அவர்களுடன் திருமணத்தில் இணைந்தார். அன்றுமுதல் இன்றுவரை ஒரேமனதுடன் கணவனும், மனைவியுமாகச் சேர்ந்து தேவதிட்டத்தை நிறைவேற்றும்படி செயல்படுகிறார்கள். விசேஷமாக, சிறுவர்களுக்காகவும், வாலிபர்களுக்காகவும் 1990 ம் ஆண்டு, டிசம்பர் மாதம் ‘நல்ல நண்பன்’ என்னும் மாதப்பத்திரிகையை வெளியிடத் துவங்கினார்கள்.

ஒருமுறை இலங்கையில் பிரார்த்தனைக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில், மழை பெய்தது. அப்போது டாக்டர். பால் தினகரன் மேடைக்கு வந்து இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் மழையை நிற்கும்படிக் கட்டளையிட்டார். என்ன ஆச்சரியம்! மழை உடனே நின்றுபோனது. ஆண்டவரின் வல்லமையை வருணிக்க வார்த்தைகளின்றி ஜனத்தார் திகைப்பில் ஆழ்த்தப்பட்டனர்.

மேலும் இவர் ஆண்டவரின் அன்பைக் குறித்த செய்திகளை வீடியோ கேசட்டுகள், ஆடியோ கேசட்டுகள், மற்றும் தொலைக்காட்சி வழியாக பிரசங்கித்து வருகிறார். தொலைக்காட்சியின் வழியாக இவர் ஏறெடுக்கும் உருக்கமான ஜெபங்களின் வழியாக அநேகர் சுகம்பெற்று, ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். அரும்பாடுபட்டு நிதிகளைத் திரட்டி இயேசு அழைக்கிறார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கென்று, சொந்தமான படப்பிடிப்புத் தளத்தை உருவாக்கினார். இன்று இத்தளத்திலேயே இயேசு அழைக்கிறார் நிகழ்ச்சிகள் அனைத்தும் தயார் செய்யப்படுகின்றன.

மேற்பகுதி


முற்பகுதி|| பிற்பகுதி

Set As Default Homepage           ||            Share With A Friend           ||           Your Comments 

Copyright 2017 Jesus Calls. All rights reserved.