டாக்டர். பால் தினகரன்

உன்னத அழைப்பு தலைமைத்துவப் பயிற்சி இருமடங்கு அபிஷேகம்
திரள்கூட்டம் வாலிபருக்கான கரிசனை பிரார்த்தனைப் படிவம்

வாலிபருக்கான கரிசனை

1996 ம் ஆண்டு, நவம்பர் மாதம், 16 ம் தேதியன்று, டாக்டர். பால் தினகரன் அவர்களுக்கு ஆண்டவர் வாலிபர்களைக் குறித்ததான கரிசனையை உருவாக்கினார். வாலிபப் பருவத்தில் ஏற்படும் மனக் கவலைகளையும், விரக்திகளையும், தற்கொலைகளையும் செய்தித்தாள்களில் வாசித்து, மிகவும் மனம் உடைந்து கண்ணீருடன் ஆண்டவரிடத்தில் மன்றாடுவார். வஞ்சனையான இக்காலக்கட்டத்தில் பாவத்தின் அடிமைத்தனத்தில் மூழ்கியிருக்கும் அனைத்து வாலிபர்களையும் மீட்கும் தரிசனம் கொண்டு செயல்படுகிறார்.

1996 ம் ஆண்டு, நவம்பர் மாதம், 16 ம் தேதியன்று கர்த்தருடைய பரிசுத்த ஆவியானவர் ஒரு புதிய திட்டத்தை அவருடைய மனதிலே தோற்றுவித்தார். தமக்கென்று முற்றிலுமாக அர்ப்பணித்து ஊழியம் செய்யும் வாலிப சேனையை உருவாக்க வேண்டுமென்று தேவன் கட்டளையிட்டார். இதன் நோக்கம் :

  • அ) பல்வேறு முறைகளில் ஆண்டவரை அறியாத வாலிபர்களுக்கு நம்பிக்கையின் சுவிசேஷத்தை அறிவிப்பது.
  • ஆ) இன்றைய வாலிபரின் ஆத்தும இரட்சிப்புக்காகவும், நல்வாழ்க்கைக்காகவும் கண்ணீருடன் மன்றாடுவது.
  • இ) இன்றைய வாலிபரின் பிரச்சினைகளைக் கண்டுணர்ந்து, வேதாகமத்தின் மூலம் அவைகளுக்குத் தீர்வு கண்டு, புத்தகங்கள், கேசட்டுகள், தொலைக்காட்சி மற்றும் வானொலி வழியாக வெளியிடுவது.

வாலிபர் மற்றும் இசை ஊழியம் இத்தரிசனத்தின் வழியாகவே தோற்றுவிக்கப்பட்டது.

டாக்டர். பால் தினகரன் வல்லமை ஊழியப் பயிற்சி முகாமிலும் பங்குபெற்று பிரசங்கிக்கிறார். ஆகவே, புவியின் எப்பகுதிக்கும் நற்பயிற்சிப் பெற்ற சுவிசேஷகர்களின் வழியாக சுவிசேஷம் பரவிச் செல்லுகிறது.

ஒவ்வொரு பிரார்த்தனைத் திருவிழாவிலும் விசேஷமாக வாலிபர்களுக்கென்று ஒருநாள் நியமிக்கப்படுகிறது. அதில் டாக்டர். பால் தினகரன் அவர்களை தேவன் வல்லமையுடன் எடுத்துப் பயன்படுத்துகிறார். இவருக்கு அளிக்கப்பட்டிருக்கும் பரிசுத்த ஆவியின் அளவில்லாத அபிஷேகத்தின் வழியாக, ஆயிரக்கணக்கான வாலிபர்கள் இயேசுகிறிஸ்துவின் அன்பிற்குரிய அரவணைப்பிற்குள் சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள். ஆண்டவருக்கென்று தங்களை அர்ப்பணித்து, பாவப்பழக்க வழக்கங்களை விட்டுவிடத் தீர்மானிக்கிறார்கள். விடுதலையடைந்த மனதோடு, இலகுவான உள்ளத்தோடு, இல்லம் சென்று மகிழ்வான வாழ்க்கை நிலையைத் தொடருகிறார்கள்.

டாக்டர். பால் தினகரன் பல்திட்ட ஊழியத்தின் மூலம் கோடிக்கணக்கானோரை மீட்கும் பணியில் &டவ;டுபட்டிருக்கிறார். நம்பிக்கை, விடுதலை, புதுவாழ்வை அருளிச் செய்தருளும் பரலோக இராஜ்ஜியத்திற்கு ஆத்துமாக்களைக் கூட்டிச் சேர்க்கிறார்.

இவரது குழந்தைச் செல்வங்களாகிய சாமுவேல் (சாம்), ஷேரன், ஸ்டெல்லா ரமோலா (ஸ்வீட்டி) ஆகிய மூவரும் இவ்வூழியப் பயணத்தில் தங்கள் பெற்றோரோடு பயணிக்கிறார்கள்.

மேற்பகுதி


முதல்பகுதி|| முற்பகுதி

Set As Default Homepage           ||            Share With A Friend           ||           Your Comments 

Copyright 2017 Jesus Calls. All rights reserved.