ஜெபகோபுரம்

ஜெபகோபுரம் 24 மணிநேர பிரார்த்தனை ஆலோசனை
ஆராதனைகள் நேரில் சந்திக்க பிரார்த்தனைப் படிவம்

ஆலோசனை

"சகோதரரே, நாங்கள் உங்களுக்குப் போதிக்கிறதென்னவென்றால், ஒழுங்கில்லாதவர்களுக்குப் புத்திசொல்லுங்கள், திடனற்றவர்களைத் தேற்றுங்கள், பலவீனரைத் தாங்குங்கள், எல்லாரிடத்திலும் நீடிய சாந்தமாயிருங்கள். ஒருவனும் மற்றொருவன் செய்யும் தீமைக்குத் தீமைசெய்யாதபடி பாருங்கள்; உங்களுக்குள்ளும் மற்ற யாவருக்குள்ளும் எப்பொழுதும் நன்மைசெய்ய நாடுங்கள்" (1 தெசலோனிக்கேயர் 5:14,15).

இனம், மதம், மொழி ஆகிய வேற்றுமைகளைக் களைந்து, பலதரப்பட்டோர் இறைவனிடம் பிரார்த்தனைச் செய்ய அனுதினமும் ஜெபகோபுரத்திற்கு வருகை தருகின்றனர்.

தேவனுக்கென்று தங்களை அர்ப்பணித்து, பயிற்சி பெற்ற ஆலோசகர்கள், வருகைதரும் அனைவரையும் மிகுந்த அன்புடன் வரவேற்று, நல்வாழ்விற்கேற்ற ஆலோசனைகளை வழங்குகிறார்கள்.

ஜெபத்துடன்கூடிய தெய்வீக ஆலோசனை வழங்குவதற்காக, தனி அறைகள் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றன. ஆலோசகரோடு மனம்விட்டு காரியங்களைப் பகிர்ந்துகொண்டு, தேவனிடத்தில் விண்ணப்பம் செய்வதற்குரிய வசதி செய்யப்பட்டுள்ளது.

துயர நேரங்களில் ஆண்டவரின் அன்பையும், மனதுருக்கத்தையும் தேடிவருகிற அன்பிற்குரியவர்களுக்கு புது நம்பிக்கையளித்து, வாழ்க்கையை மாற்ற தேவன் கிருபையுள்ளவராயிருக்கிறார்.

இதன் மூலம் ஆண்டவருடைய அற்புதங்களைப் பெற்றுக்கொண்டோரின் சாட்சிகளையும் இந்த இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறோம். ஆண்டவருடைய நாமம் மகிமைப்படுவதாக!

துயரம் நிறைந்த வாழ்க்கையில் வெற்றி காணும் வழி எது?தாமதிக்காமல் வருகைதந்து, இறைவனின் இளைப்பாறுதலைப் பெற்றுக்கொள்ளுங்கள்!


தொடர்புகொள்ளுங்கள்:

இயேசு அழைக்கிறார் ஜெப கோபுரம்,
16, டி.ஜி.எஸ். தினகரன் சாலை,
சென்னை - 600028, இந்தியா.
தொலைபேசி : 044 33999000
தொலைநகல் : 24936988
மின்னஞ்சல்: admin@jesuscalls.org

Set As Default Homepage           ||            Share With A Friend           ||           Your Comments 

Copyright 2018 Jesus Calls. All rights reserved.