ஜெபகோபுரம்

ஜெபகோபுரம் 24 மணிநேர பிரார்த்தனை ஆலோசனை
ஆராதனைகள் நேரில் சந்திக்க பிரார்த்தனைப் படிவம்

ஆராதனைகள்

சென்னை

இயேசு அழைக்கிறார் ஜெபகோபுர வளாகத்தில் ஆராதனைகள் நடைபெறுகின்றன. இவற்றில் இந்தியாவிலும், வெளிநாடுகளிலுமிருந்து ஜனங்கள் கலந்துகொண்டு தெய்வீக சுகம் பெறுகிறார்கள். நோயாளிகள் ஒவ்வொருவர்மீதும் ஜெபவீரர்கள் தங்கள் கரங்களை வைத்து ஜெபிக்கிறார்கள். அவர்களுடைய உருக்கமான மன்றாட்டுகளை கேட்டருளும் ஆண்டவர் கணக்கற்ற அற்புதங்களை செய்துவருகிறார்.

ஆராதனைக்குரிய காலஅட்டவணை

பிற வசதிகள்

தியான அறை

"நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப்பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார்" (மத்தேயு 6:6).

அமைதிமிகுந்த அழகிய தியான அறை ஜெபகோபுரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஜெபகோபுர வருகையாளர்கள் அனைவரும் அமர்ந்திருந்து கர்த்தருடைய வார்த்தையை தியானித்து, ஜெபிப்பதற்கு ஏற்ற புன்னிய ஸ்தலமாக இது விளங்கி வருகிறது.

காலை 8 மணிமுதல் மாலை 8 மணிவரை இச்சேவை தொடரும். இங்கு வந்து, தேவனுடைய பிரசன்னத்தை அனுபவித்து இன்புறுங்கள்.

நூலகம்

ஜெபகோபுர வளாகத்திலுள்ள நூலகத்தில், சகோதரர் தினகரன் குடும்பத்தினரின் ஆடியோ கேசட்டுகள், சி.டி.க்கள், புத்தகங்கள் மற்றும் பல்வேறு கிறிஸ்துவ நூல்களையும், கேசட்டுகளையும், சி.டி.க்களையும் வாங்கிப் பயன்பெறுங்கள். ஆண்டவருடன் இணைந்து வாழும் வாழ்க்கையில் முன்னேறிச் செல்லுங்கள்!

கலங்கித் தவிக்கும் ஆயிரக்கணக்கானோரின் கண்ணீர் துடைக்கக் கரம் நீட்டுங்கள்!


தொடர்புகொள்ளுங்கள்:

இயேசு அழைக்கிறார் ஜெப கோபுரம்,
16, டி.ஜி.எஸ். தினகரன் சாலை,
சென்னை - 600028, இந்தியா.
தொலைபேசி : 044 33999000
தொலைநகல் : 24936988
மின்னஞ்சல்: admin@jesuscalls.org

Set As Default Homepage           ||            Share With A Friend           ||           Your Comments 

Copyright 2017 Jesus Calls. All rights reserved.