ஜெபகோபுரம்

ஜெபகோபுரம் 24 மணிநேர பிரார்த்தனை ஆலோசனை
ஆராதனைகள் நேரில் சந்திக்க பிரார்த்தனைப் படிவம்

24 மணிநேர தொலைபேசி ஜெபம் மற்றும் ஆலோசனை

"நான் சமீபத்திற்கு மாத்திரமா தேவன், தூரத்திற்கும் தேவன் அல்லவோ என்று கர்த்தர் சொல்லுகிறார்" (எரேமியா 23:23).

1983 ம் ஆண்டு, ஆகஸ்டு மாதம், 12 ம் தேதியன்று ஆண்டவராகிய தேவன் சகோதரர். டி.ஜி.எஸ். தினகரன் அவர்களுக்குக் கொடுத்த தரிசனத்தின் பிரகாரம் 24 மணிநேர ஜெபகோபுர தொலைபேசி ஊழியம் துவங்கப்பட்டது.

துயருறும் மனித குலத்திற்கு தேவனின் அன்பையும், மனதுருக்கத்தையும் பகிர்ந்தளித்து, திறப்பின் வாசலில் நின்று அவர்களுக்காக உருக்கத்துடன் மன்றாடும் ஜெபவீரர்களையும், ஜெபவீராங்கனைகளையும் எழுப்புவதே இத்திட்டத்திற்குரிய தரிசனமாகும்.

உலகெங்கிலுமிருந்து ஏராளமானோர் அனுதினமும் இச்சேவையை பயன்படுத்தி மகிழ்ச்சியடைகிறார்கள். ஜெபகோபுரத்திற்கு நேரில் வரமுடியாதவர்கள், தொலைபேசியிலேயே பிரார்த்தனை மற்றும் ஆலோசனை உதவிகளை பெற்றுக்கொள்ளுகிறார்கள்.

இங்கு ஏறெடுக்கப்படும் ஜெபங்கள் அனைத்திற்கும் தவறாமல் பதிலளிக்கும் தேவன், கணக்கற்ற அற்புதங்களைச் செய்தருளுகிறார்.

கவலைப்படாதிருங்கள், நாங்கள் உங்களுக்காக ஜெபிக்கிறோம்!

24955555 என்ற தொலைபேசி எண்ணுக்கு, எங்கிருந்தாலும், எப்போது வேண்டுமானாலும் டயல் செய்யுங்கள்.


தொடர்புகொள்ளுங்கள்:

இயேசு அழைக்கிறார் ஜெப கோபுரம்,
16, டி.ஜி.எஸ். தினகரன் சாலை,
சென்னை - 600028, இந்தியா.
தொலைபேசி : 044 33999000
தொலைநகல் : 24936988
ä‹dŠrš: admin@jesuscalls.org

Set As Default Homepage           ||            Share With A Friend           ||           Your Comments 

Copyright 2018 Jesus Calls. All rights reserved.