பக்திவிருத்தி மற்றும் சீர்பொருந்தும் வருடம்:

"பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு. சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும், அவர் சிலரை மேய்ப்பராகவும் போதகராகவும் ஏற்படுத்தினார்." (எபேசியர் 4:12,13) என்ற வசனத்தின்படி,

 • கிறிஸ்துவின் சரீரமாகிய சபை பக்திவிருத்தியடையும்.
 • சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காக பரிசுத்தவான்கள் சீர்பொருந்துவார்கள். தேறினவர்களாக்கப்படுவார்கள்.

உலகத்திற்கான தீர்க்கதரிசனம்:

 • சீனா உலக சந்தையில் முன்னணி வகிக்கும்
 • கனடா, உலக தேசங்களிடையே சமாதானத்தை உண்டாக்குவதில் பெரும்பங்கு வகிக்கும். மற்ற நாடுகளில் பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும் அது முன்னணி வகிக்கும்.
 • வானில் நட்சத்திரங்களிடையே புதிய கூட்டமைப்பு உண்டாகும். அதாவது இயேசு பிறந்தபோது நடந்தபடி.
 • உலகில் புதிய பொருளாதார கொள்கைகள் மற்றும் புதிய பொருளாதார சக்திகள் உருவாகும்.
 • புதிய வியாபார வழித்தடங்கள் உருவாகும். வணிகம் செய்வதற்கு புதிய நாடுகளின் கூட்டமைப்பு ஆரம்பமாகும்.
 • 2014, ஏப்ரல் 6 அன்று, நான் கண்ட தரிசனத்தின்படி, இஸ்ரேலுக்கும் அதன் அருகிலுள்ள நாடுகளுக்கும் ஒருவருக்கொருவர் சமாதானம்பண்ணிக் கொண்டு வியாபார உறவுகளை உருவாக்கும் முயற்சியை ரஷ்யா தொடங்கும். இந்த சமாதான உறவுகள் இந்த வருடத்திலிருந்து ஆரம்பமாகும் (ஏசாயா 19:23-25).
 • உலகளவில் வாங்குதல், விற்றல் தொடர்பாக புதிய சந்தை உருவாகும். பல நாடுகளின் நாணயங்கள் வணிகத்திற்காக ஒருங்கிணையும்.
 • இதன் மூலமாக உலகில் ஒன்றுக்கொன்று எதிரிடையாய் போர் செய்யும் நாடுகளுக்கிடையே சமாதான நடவடிக்கைகள் உருவாகும்.
 • பொருளாதாரத்தின் வலிமையான நாடுகளின் அதிகாரிகள் புதிய கொள்கைகளைப் பின்பற்ற ஆரம்பிப்பார்கள்.
 • தேவனால் நடத்தப்படுகிற தம்முடைய பிள்ளைகளுக்கு, ஆண்டவர் இந்த ஆண்டு புதிய தொழில்கள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களைக் கொடுப்பார். அவர்களுடைய குடும்பங்களும் இந்த ஆண்டில் புதிய ஆசீர்வாதங்களால் ஆசீர்வதிக்கப்படும்.
 • கர்த்தருடைய ஊழியங்கள் புதிய செயல்திட்டங்களுக்குள் நுழையும். தேவதயவினால் அவைகள் நிறைவேற்றப்பட்டு மிகுந்த பெருக்கத்தைக் கொண்டுவரும்.
 • உலகின் நீதித்துறை முறைமைகளில் மிகப்பெரிய அதிர்வுகள் உண்டாகும்.
 • உலகின் மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் மற்றும் பொருளாதார சக்திகள் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து, புதிய கூட்டமைப்புகள் அமையும். சமாதானத்திற்காக தேசங்கள் ஒருங்கிணையும். எனினும், சமாதானப் பிரபுவாகிய ஆண்டவர் இயேசு திரும்ப வரும் வரைக்கும் சமாதானம் நிலவாது.
 • பயணம் தொடர்பான தொழில் நுட்பத்தில் மிகப்பெரிய திருப்புமுனை உண்டாகும்.
 • மருத்துவ விஞ்ஞானத்தில், வலி நிவாரணம் மற்றும் வலி ஆற்றும் மருத்துவத்தில் புதிய கண்டுபிடிப்புகள் உண்டாகும். அது காயங்களை ஆற்றும் விஞ்ஞானத்தில் புதிய முன்னேற்றங்களைக் கொண்டு வரும்.
 • அரசியல் மற்றும் தொழிலில் உலக பெரும் சக்திகள் உடைக்கப்பட்டு, புதிய கூட்டமைப்பு உண்டாகும்.

இந்தியாவிற்கான தீர்க்கதரிசனம்

 • தொழில்நுட்ப பிரிவில் வேலைவாய்ப்பு எண்ணிக்கைகள் அதிகளவில் உருவாக்கப்படும்.
 • வட்டிவிகித அளவுகள் அதிகரிக்கும். வாங்கும் சக்திகள் குறையும். அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றில் பற்றாக்குறை உண்டாகும்.
 • இளைஞர்கள் ஆவிக்குரிய மற்றும் ஒழுக்க ரீதியில் சிதைவுபெறும் வகையில் அவர்களை வசப்படுத்தும்படி புதிய தொழில்நுட்பங்கள் எழும்பும். எனினும், தங்களுடைய தியாகம் மற்றும் கீழ்ப்படிதல் மூலமாக, ஒரு வாலிப சேனை எழும்பி தேவனுடைய நீதியை அறிவிக்கும். அவர்கள் சிங்கங்களைப்போல தைரியமாயிருந்து, அற்புதங்களைச் செய்வார்கள்.
 • என் கட்டளைக்குக் கீழ்ப்படிகிறவர்கள் மட்டுமே தேசத்தில் உயர்த்தப்படுவார்கள். அவர்கள் வாலாக இருக்கமாட்டார்கள், தலையாக இருப்பார்கள். இது நிறைவேற்றப்படும்வரைக்கும் நான் ஓய்ந்திருக்கமாட்டேன்.
 • பெரும்பாலாக தேசத்தில் சமாதானம் காணப்படும். எங்கெல்லாம் சுவிசேஷம் இதுவரை பிரசங்கம்பண்ணப்பட்டிருக்கிறதோ, தேசத்தின் அந்த இடங்களில் தேவனுடைய தயவு விளங்கும். அந்த இடங்களில் செழிப்பு உண்டாகும்.

ஆவிக்குரிய உலகம்

 • தேவனோடு சமாதானம்பண்ணிக்கொள்ள வேண்டிய ஆண்டு இது.
 • பயபக்தி நிலைப்படுத்தப்படும். அது ஒருவருடைய தனிப்பட்ட வாழ்வில் வளர்ச்சியை உண்டாக்கும். வெளிப்படுத்தல் 22:11,12. தமக்கு ஊழியம் செய்கிறவர்களுக்கும், ஊழியம் செய்யாதவர்களுக்குமிடையே தேவன் வித்தியாசத்தைக் காண்பிப்பார்.
 • ஜெபத்திலேயே கர்த்தருக்காக காத்திருக்கிற திரள்கூட்ட மக்கள் உண்டு. அவரை மீண்டும் வரவேற்பதற்கு அவர்களுடைய இருதயங்கள் ஆயத்தமாக்கப்படும். இந்த ஆண்டு இரட்டிப்பான விதத்தில் ஆசீர்வாதங்கள் அவர்கள்மீது வந்திறங்கும்.
 • ஜெபவீடுகளில் செய்யப்படும் ஜெபங்கள் தேவனுக்குச் சுகந்த தூபங்களாக இந்த வருடத்தில் எழும்பும். அந்த ஜெபவீடுகள் செழிக்கும். அவைகளில் சமாதானம் பெருகும். அவர்களுக்கு அடைக்கலம் கிடைக்கும்.
 • ஊழியங்கள் பற்றாக்குறை உள்ளவர்களுக்கு சேவை செய்யும்.
 • இஸ்ரேல் மக்கள்மீது பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்படுவார். அங்கே இரட்சிப்பிற்கேதுவான மனந்திரும்புதல் உண்டாகும்.
 • இஸ்ரேல்மீது பரிசுத்தஆவி ஊற்றப்படுகையில், “உயர வானத்திலே அற்புதங்களையும், தாழப் பூமியிலே இரத்தம், அக்கினி, புகைக்காடாகிய அதிசயங்களையும் காட்டுவேன்” (அப்போஸ்தலர் 2:19) என்ற வசனத்தின் நிறைவேறுதல் காணப்படும்.