தெய்வீக பராமரிப்பின் வருடம்:

2017 ஆம் வருடம் தெய்வீக பராமரிப்பின் வருடமாக இருக்கும். தேவனுடைய வாக்குத்தத்தமான பிலிப்பியர் 4:19 என்ற வேதவசனம் உங்கள் வாழ்க்கையிலே நிறைவேறும் வருடமாக இந்த வருடம் இருக்கும்.

 • 2017-ல் ஆண்டவரைத் தேடுகிறவர்களுக்கும் தேடாதவர்களுக்கும் இடையே தெளிவான ஒரு பிரிவினை உண்டாகும். இந்த பிரிவினை ஆளுகிறவர்கள் மத்தியிலும் ஆளுகையின் மத்தியிலும் மீடியா, தொழில் மத்தியிலும், வணிகங்களின் மத்தியிலும், கலாச்சாரங்களின் மத்தியிலும், கல்வி நிறுவனங்களின் மத்தியிலும், சமுதாயக் கூடுகைகளிலும், விளையாட்டுகளிலும் கூட அனுபவப் பூர்வமாக விளங்கும். ஆண்டவரின்மேல் நம்பிக்கை வைக்காதவர்கள் அனைவரும் ஒரே சக்தியாக இணைவார்கள். அவர்கள் ஆண்டவரை நம்புகிறவர்களை எதிர்பார்ப்பார்கள்.
 • ஆண்டவர் சொல்லுகிறார், என்னைத் தேடுகிறவர்களுக்கு இவ்வுலகில் என்னைத் தவிர நம்புகிறதற்கு வேறு ஆதாரமோ, வேறு நபரோ உதவியாக இருக்கமாட்டார்கள். அவர்கள் என்மீது மட்டுமே நம்பிக்கை கொண்டு வாழும்படியான அவசியம் உண்டாகும். ஆண்டவருடைய திட்டங்களை பின்பற்றி வாழ்ந்தால் மட்டுமே இந்த வருடத்திலே வாழமுடியும்.
 • ஆண்டவர் சொல்லுகிறார், என்னை நம்பி வாழ்கிறவர்கள் அனைவரையும் என் தூதர்களே பொறுப்பேற்று அவர்களை வழிநடத்துவார்கள். இந்த வருடம் என் ஊழியர்கள் என்னுடைய இராஜ்ஜியத்தில் ஆளுகை செய்வார்கள்.
 • விசுவாசமாக என்னைச் சுமக்கும் அமைப்புகள் பெலன் பெறும். தேசத்திலே நீதிக்குச் சாட்சியாக விளங்கும்.
 • ஆனாலும் நான் எப்போதும் அவர்களைத் தாழ்மையாய் வாழும்படிக்கு அவர்களுடைய ஆத்துமாக்களை காத்து கொள்வேன்.

இந்த வருடத்திலே ஆண்டவர் விசேஷமாக செய்ய போகும் காரியம் இதுவே.

இந்தியா:

 • தேசம், ஆளுகையில் முற்றிலுமாக ஒரு மாற்றத்துக்குள் கடந்து செல்லும்.
 • தேசத்தின் ஆளுகை, வணிகத்தின் கலாச்சாரத்தை கொண்டு செயல்பட ஆரம்பிக்கும். புதிய வணிகங்கள் வளர்ப்பதையே அரசாங்கம் நோக்கமாக கொண்டிருக்கும்.
 • அரசாங்கத்தின் கொள்கைகள் வணிகத்தை மேன்மைப்படுத்தும்.
 • இதினிமித்தம் எல்லாவித கலாச்சாரங்களுக்கும், சடங்காச்சாரங்களுக்கும், கோட்பாடுகளுக்கும் தேசத்தில் இடம் உண்டாகும்.
 • மத்திய அரசின் ஆளுகை பெலன் பெறும். மத்திய அரசு நல்லாட்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும்.
 • அரசாங்கம், கால சூழ்நிலை மாற்றத்தினால் ஏற்படும் விளைவு மற்றும் இயற்கை வளங்களை மேன்மைப்படுத்துதல் ஆகியவற்றுக்கு முன்னுரிமை கொடுக்கும்.
 • ஆற்றல் உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் ஆற்றலுக்கான மூல அமைப்புகளை மேம்படுத்தும் காரியங்களில் அரசாங்கம் வேகமாக செயல்படும்.
 • தேசம் எல்லா பக்கங்களிலும் அமைதியாக இருக்கும். பொருளாதார முன்னேற்றத்தில் செலுத்தப்படும் கவனம் தேசத்தில் எல்லா நிலைகளிலும் ஆதரவு பெறுவதால், எல்லைகளில் சமாதானம் விளங்கும்.
 • வட இந்தியாவுக்காக ஜெபியுங்கள் என்று ஆண்டவர் கூறியிருக்கிறார். வட இந்திய மாநிலங்களில் அரசியல் வலிமை விளங்குவதை காண்பீர்கள். என்னுடைய சுவிசேஷம் வட இந்தியாவின் எல்லா இடங்களிலும் ஊடுருவும். என் ஜனங்களின் மகத்துவமும், முக்கியத்துவமும், கனமும் இந்த வருடத்திலே உயரும். என் ஊழியர்கள் மத்தியில் நான் மகிமைப்படுவேன் என்று ஆண்டவர் சொல்லுகிறார்.
 • ஆந்திர பிரதேசம் வறட்சியென்ற சோதனை காலத்தின் வழியாய் கடந்து செல்ல நேரிடும்.

ஆசியா தென் கிழக்கு நாடுகள்:

 • ஆசியாவின் தென் கிழக்கு நாடுகளில் மக்கள் மத்தியில் ஆண்டவருடைய வல்லமையான கரம் இறங்க போகிறது.
 • நான் அவர்கள் தேசங்களை ஆளுகை செய்வேன் என்று ஆண்டவர் கூறியிருக்கிறார். அந்த தேசங்கள் என் வெளிச்சத்தை அனுபவிப்பார்கள்.
 • பூமியின் தென்கிழக்கு நாடுகளில் தேவனுடைய ஆவி ஜனங்களின் இருதயத்திற்குள் இறங்கும். ஆண்டவருடைய மகிமை அவர்கள் உதடுகளில் காணப்படும். இதினிமித்தம் தங்கள் தேசங்களின் மீது வரும் தாக்குதல்களை அவர்கள் எளிதாக மேற்கொள்வார்கள்.
 • நான் என் ஜனங்களை இந்த தேசங்களுக்கு முன்பதாக தாழ்த்தி என்னிடம் அவர்களை ஒப்புக்கொடுக்கும்படியாக செய்வேன். இதினிமித்தம் ஒரு பெரிய சுத்திகரிப்பு தேசத்தில் ஜனங்கள் மத்தியில் அவர்கள் இருதயத்தில் இறங்கும் என்றார்.
 • அப்பொழுது ஆசியா நாடுகள் மிகுந்த பேர் பிரஸ்தாபத்தை பெறும். அவைகளின் மத்தியில் ஆண்டவருடைய பெயரும் உயர்த்தப்படும்.
 • வடக்கு மற்றும் தென்கொரியா தேசங்கள் மத்தியில் ஓர் ஒற்றுமையை ஆண்டவர் கட்டளையிடுவார்.
 • தங்கள் மத்தியில் என்னுடைய மகிமையை வெளிப்படுத்துவதற்காக இவை இணைந்து செயல்படும் என்று ஆண்டவர் சொன்னார்.

ஜப்பான்:

 • ஜப்பான் மற்றும் அதைச் சுற்றியுள்ள தேசங்களில் என்னுடைய சுகமளிக்கும் பிரசன்னத்தை, நான் விளங்கச் செய்வேன்.
 • இந்த தேசங்கள் ஒன்றோடொன்று இணையும். அவர்கள் என்னுடைய ஆசிக்காக வேண்டி நிற்பார்கள்.
 • நான் அவர்களை நீதியினாலும் ஜெயத்தினாலும் முடிசூட்டுவேன். உலக அரங்கில் ஜப்பான் மற்றும் அதை சுற்றியுள்ள தேசங்கள் காலூன்றி நிற்கும்படி செய்வேன். உலக நாடுகளுக்கு இவைகள் சமாதானத்தையும், செழிப்பையும் கொண்டு வரும் தூதுவர்களாக விளங்கும்படி நான் செய்வேன்.

பாகிஸ்தான்:

 • மக்கள் மத்தியில் பாகிஸ்தான் தேசத்தில் என்னுடைய அன்பின் எழுப்புதலை உருவாக்குவேன்.
 • அதன் எல்லைகளில் என்னுடைய சமாதானம் ஓங்கும்.
 • மக்கள் மத்தியில் அமைதி நிலவும்.
 • இவை நிகழும்போது இயற்கை வளங்கள் புதிதாக கண்டுபிடிக்கப்படும், அவை பெருகும். அவர்கள் சமாதானத்தினிமித்தம் செழிப்பார்கள்.

அஸர்பெய்ஜான்:

 • தேசம் என்னுடைய மகிமையையும் கிருபையையும் அனுபவிக்கும். அஸர்பெய்ஜான் தேசத்திலே எழுப்புதல் தொடங்கும்.
 • என்னுடைய பரிசுத்த ஆவியானவருக்கு அங்கு அவர்கள் இடம் கொடுத்ததினிமித்தமும், அங்கு காணப்படும் தீவிரமான வெறுப்பு, பகை உணர்வுகள் அனைத்தும் அகன்று போகும் என்று ஆண்டவர் சொன்னார்.
 • வற்றாத ஜீவநதிகள் தேசத்தை செழிப்பாக்கும். நான் அருளும் செழிப்பு தேசத்தை நிறைக்கும்.
 • தேசத்தின் எல்லைகளில் சமாதானம் விளங்கும்.

ஜெர்மனி:

 • மீண்டும் என் பிரகாசத்தை ஜெர்மனி தேசம் பெறும். தேசம் சுத்திகரிப்பின் வழியாய் கடந்து செல்லும்.
 • தேசத்தின் தென்பகுதி அழிவின் வழியாக செல்லும், இயற்கை சீற்றங்கள் தாக்கப்படும். ஆனாலும் ஆண்டவர் சொல்கிறார், என்னுடைய மகிமையை விளங்கச் செய்யும்படியாகவே அவைகள் அனுமதிக்கப்படும்.
 • ஜெர்மனி, இஸ்ரவேல் தேசத்துடன் சமாதானம் செய்து கொள்ளும்.
 • தேவபக்திக்குரிய பொக்கிஷங்கள் மற்றும் செல்வத்தினால் ஜெர்மனி தேசம் மறுபடியும் செழிக்கும்.

நார்வே:

 • இப்போது சமாதானமாக இருக்கும் அந்த தேசத்தின் எல்லைகளில் இருள் சூழும்.
 • சமாதானத்தை பெறும்படியாக, உற்பத்தி தொழில்நுட்பம் அங்கு ஆரம்பிக்கப்பட வேண்டும்.
 • ஆண்டவர் சொன்னார், இதோ தேசத்தின் மந்த ஆவியின் கொடூரத்திலிருந்து நான் விடுவிக்கும், அந்த தேசத்தின் வாசலுக்குள் நான் பிரவேசிக்க ஆயத்தமாகிவிட்டேன். இப்பொழுதோ அந்த வாசலுக்கு முன்பதாக நிற்கிறேன் என்றார்.

ஆப்பிரிக்கா:

 • ஆப்பிரிக்கா தேசங்களில் வெவ்வேறு இடங்களில் இனப்படுகொலைகள் நடைபெறும்.
 • அந்த அழிவுகளின் மத்தியில் அந்த தேசங்களில் தேவனுடைய முகம் பிரகாசிக்க ஆரம்பிக்கும்.
 • மாக பிரார்த்தனையில் ஈடுபடப்போகிறார்கள். ஏழைகளை குறித்து அக்கறையும், கரிசனையும், மனதுருக்கமும் கொள்வார்கள்.
 • அவர்களுடைய ஜெபதாபரங்கள் எல்லாம் அதன்பிறகு தேவனுடைய போஷிப்பின் ஸ்தலமாக மாறிவிடும். களஞ்சியங்களாக மாறிவிடபோகிறது. எந்த இடத்திலெல்லாம் ஜெபம் செய்கிறார்களோ, அந்த இடத்திலெல்லாம் தேவன் செழிப்பை கட்டளையிட்டு யோசேப்பின் காலத்தை போல, எல்லா ஜனங்களுக்கும் களஞ்சியங்களில் எடுத்து கொடுக்கும்படியாக ஜெபதாபரங்கள் ஆசீர்வாத களஞ்சியங்களாக மாறிவிடும் என்று ஆண்டவர் சொன்னார். அங்கு நம்பிக்கை பிறக்கும். இதை அவர்கள் மத்தியில் சீக்கிரமாக நிலைப்படுத்துவேன் என்று ஆண்டவர் சொல்கிறார்.
 • ஆப்பிரிக்கா சந்தைகள் என்னுடைய மக்களால், என்னுடைய ஊழியர்களால் நிரம்பும்.

அமெரிக்க ஐக்கிய நாடுகள்:

 • பெலத்தையும், செல்வத்தையும் மீண்டும் பெற்றுக்கொள்ளும்.
 • வேதாகம நம்பிக்கையிலிருந்து அவர்கள் விலகும்போது, விரைவிலேயே வெற்றிக்கான கொள்கைகளிலிருந்து அது விழும். அதன் பிறகு அதன் ஆளுகையிலிருந்து என் கரம் நீக்கப்படும்.
 • உள்நாட்டு பிரிவினைகள் சண்டைகள் அங்கு பிறக்கும்.
 • அரசியல் திருத்தங்கள், இனப் பிரச்சினைகள் மீண்டும் தேசத்தில் தலை தூக்கும்.
 • ஒவ்வொருவரின் நம்பிக்கையும் இதினிமித்தம் தகர்க்கப்படும். பெரும் எண்ணிக்கையிலான மக்களிடையே தீமை காணப்படும். பாலியல் பலாத்காரம் நடைபெறும்.
 • அதன்பிறகு அமெரிக்கா நாட்டு மக்கள் எல்லா அசுத்தங்களிலிருந்தும் தங்களை விடுவித்துக்கொள்ளும்படி, பரிசுத்த ஆவியானவர் தேசத்தின்மீது இறங்கி வருவார்.
 • இந்த நேரத்தில் தான் நான் என் சிறுவர்கள், சிறுமிகள் மீது என் ஆவியை ஊற்றுவேன். அவர்கள் ஒவ்வொரு பள்ளிகளிலும் என் ஆவியை திரளாய் பெற்று கொள்வார்கள். அவர்கள் இந்த கொடூரங்களுக்கு விரோதமாக எழும்புவார்கள். தேசத்தின் உயர் ஸ்தானங்களுக்கு முன்பதாக பரிசுத்தத்திற்காக அவர்கள் வாதாடுவார்கள். அவர்கள் நிமித்தம் நான் தேசத்திலே பரிசுத்தத்தை அனுப்புவேன். சிறுப்பிள்ளைகளை கவனித்துப் பாருங்கள். அவர்கள் மூலம்தான் நான் அமெரிக்காவிற்கு ஷேமத்தை கட்டளையிடுவேன் என்று கர்த்தர் சொல்லியிருக்கிறார்.
 • அதன்பிறகு என்னுடைய மக்களால் என்னை நேசிக்கும் மக்களால் அமெரிக்காவில் நான் உயர்த்தப்படுவேன். நான் அவர்கள்மேல் வைத்திருக்கும் அன்பினிமித்தம் அவர்கள் மீண்டும் அதிகாரத்தை பெற்றுக்கொள்வார்கள்.
 • சூப்பர்டோம்ஸ் என்னும் திறன்வாய்ந்த கணினிகள் நொறுங்கும், அழியும்.
 • என்னுடைய நாமத்தை சுமப்பவர்களிடமே பணம் மற்றும் பலம் இருக்கும். தேசம் தாழ்மையோடு என்னை ஏற்றுக்கொள்ளும். இவை எல்லாவற்றின் மூலமும் நான் தேசத்திற்கு வெகு சமீபமாய் இருப்பேன் என்று ஆண்டவர் அமெரிக்கா தேசத்தை குறித்து சொல்கிறார்.